உலகில் கொரோனா தொற்று நோய்க்கு பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தொற்று நோயால், நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் உலகில் பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. இந்திய நேரம் மாலை 4.20 மணி நிலவரப்படி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதேபோல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்தை நெருங்கியிருந்தது.
கொரோனா பாதிப்பு மற்றும் பலியில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதேபோல் பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்திருந்தது.
அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியிருந்தது. உலகில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்திலுள்ள இத்தாலியில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 22,700 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகில் கொரோனா பாதிப்பிலிருந்து சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து பல்வேறு நாடுகளிலும் 15 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 57 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்