பெரு நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வந்த 90 வயது முதியவர் குணமாகி வீடு திரும்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
லிமா நகரிலுள்ள மருத்துவமனையில் வலரியோ சான்டா க்ருஸ் (Valerio Santa Cruz) என்ற முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவ சிகிச்சையில் குணமானதையடுத்து வீட்டுக்கு திரும்பிய அவரை, அங்கிருந்த மருத்துவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.