பிரேசில் நாட்டின் கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோவில், மக்களுக்கு, கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அதிகாரிகள் ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ட்ரோன்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
மக்கள் கூடுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ட்ரோன்களை காண, மக்கள் அதிகளவில் கூடுவது, விநோதத்தின் உச்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.