இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் கிறித்தவ தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 119பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய கொழும்பு காவல் அதிகாரி, ஊரடங்கு உத்தரவு காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாகவும், குண்டுவெடிப்பின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி கொழும்பு செயிண்ட் அந்தோணி ஆலயம் மற்றும் நிகோம்போவில் உள்ள செயிண்ட் செபாஸ்டியன் ஆலயம் மற்றும் 2சொகுசு ஓட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.