கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியையும் அவற்றுக்கு கொடுத்து உதவ முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜியிவா (Kristalina Georgieva) தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் உள்ள 189 உறுப்பு நாடுகளில் 102 நாடுகள் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கேட்டுள்ளதாக கூறினார்.
1930 காலகட்டத்தில் ஏற்பட்ட மகா பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகை வாட்டும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவால் ஏற்படும் என அவர் தெரிவித்தார். 170 க்கும் அதிகமான நாடுகளில் தனிநபர் வருமானம் குறைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.