தாய்லாந்தில் தேசிய நெடுஞ்சாலையை 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தலைநகர் பாங்காக் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அடிக்கடி வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்லும் என்பதால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் யானைக் கூட்டம் ஒன்றை கண்காணித்து வந்த வனத்துறையினர் சாலையின் குறுக்கே யானைக் கூட்டம் வரும் என்பதைக் கணித்து வைத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இந்த யானைக் கூட்டம் சாலையைக் கடக்க இருந்ததையடுத்து அங்கு வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெறும் 40 வினாடிகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக சாலையைக் கடந்து சென்றன.