கார்களில் உள்ள ஏர்பேக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கவச உடையை ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை பல்வேறு தரப்பினரும் தயாரித்து வருகின்றனர்.
இதில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கார்களில் விபத்தின் போது தப்புவிக்கப் பயன்படும் ஏர்பேக் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களில் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. எளிதில் கிழியாத இந்த வகை உடைகளை சுத்தப்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஏர்பேக் செய்யும் ஜாய்சன் நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.