அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் அது பற்றி விரைந்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்குக் கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டுச் சொந்த நாடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். ஏராளமானோரின் விசாக் காலம் முடியும் தறுவாயில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தேசிய அவசர நிலையாகக் கருதி விசாக்காலம் முடிந்த பின்னரும் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.
இதனால் விசாக்காலத்தை நீட்டிக்கக் கோரி வரும் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும் எனக் குடியுரிமை சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.