யு.ஏ.இ. எனப்படும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில், விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசாவில் வந்து தங்கி, சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிப்பவர்களின் விசா காலாவதி இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மார்ச் ஒன்றாம் தேதிக்குப் பிறகு விசா காலாவதியானவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யு.ஏ.இ. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.