கொரோனா நோய்க்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பு இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்புமருந்து துறை வல்லுநர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறையும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீதும் பரிசோதிக்க பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி உலகம் முழுவதும் விரைந்து கிடைக்கும் வகையில், பெரும் எண்ணிக்கையில் அதை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளோடு இருப்பது அவசியம் என சாரா கில்பர்ட் கூறியுள்ளார்.