அமெரிக்காவின் மிசிசிபி மற்றும் லூசியானா மாநிலங்களில் வீசிய கடும் புயலுக்கு 6பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புயலானது பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சூறாவளிகள் ஒன்று சேர்ந்து தாக்கினால் எப்படி அழிவு இருக்குமோ அவ்வாறு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் கொரோனா காரணமாக இந்த இரண்டு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
இந்த 6 உயிரிழப்புகளும் மிசிசிபியில் தான் நிகழ்ந்துள்ளதாக மாநில அவசர நிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.