உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நொடிக்கு நொடி உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி,உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 5 ஆயிரத்து 400 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது .
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்து விட்டது.இத்தாலியில் ஒரே நாளில் 556 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.
ஸ்பெயினில் 17 ஆயிரத்து 756 பேர் பலியாக, பிரான்சில் உயிரிழப்பு 14 ஆயிரத்து 967 ஆக அதிகரித்தது.இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.
ஈரானில் ஒரே நாளில் 111 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 4 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.பெல்ஜியத்தில் உயிரிழப்பு 4 ஆயிரத்தை நெருங்க, சீனா, ஜெர்மனி நாடுகளும் பலி எண்ணிக்கையில் 3 ஆயிரத்தை தாண்டி நிற்கின்றன.
நெதர்லாந்து நாட்டில் உயிர் பலி 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது. சுவிட்சர்லாந்து , பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
உலகில் 60 க்கும் மேற்பட்ட நாடுகள், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளன. மொத்தம் 51 ஆயிரத்து 742 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.