கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் வீட்டில் இருக்க வலியுறுத்தி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளியிட்டுள்ள வீடியோ விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஷோபா ஒன்றில் அமர்ந்து தனது வளர்ப்பு நாயை கொஞ்சுவது போன்றும் தேநீர் அருந்துவருது போன்றும் புத்தகம் படிப்பது போன்றும் டிவி பார்ப்பது போன்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி பிரதமர் அபே ட்வீட் செய்திருந்தார்.
இந்த வீடியோ, கொரோனாவால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீங்கள் யார் என்று நினைக்கிறீர்கள் என்றும் பிரதமர் அபேவுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.