பிரேசில் நாட்டில், உலக அதிசியங்களில் ஒன்றான, மீட்பர் ஏசு சிலை, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, மருத்துவர் உடை அணிந்திருப்பது போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 20,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் பிடியில் இருந்து அவர்களை மீட்க, போரடும் மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில், மீட்பர் சிலை, மருத்துவ உடையில், காட்சி படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்களின் முகங்களும், மக்கள் வீட்டில் இருக்குமாறு வலியுறுத்தும் அறிவுரைகளும், சிலை மீது ஒளிபரப்பப் பட்டது.