பிரேசில் நாட்டில், 97 வயது மூதாட்டி, கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி, வீடு திரும்பியுள்ளார்.
பிரேசிலில், 1200 க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, வீடு திரும்பியுள்ளது, மற்ற நோயாளிகளுக்கு, மன தைரியத்தை வரவழைத்துள்ளது.
முன்னதாக, அவர் குணமாகி, வீடு திரும்பும் போது, மருத்துவமனை ஊழியர்கள், இருபுறமும் அணிவகுத்து, கை தட்டி, உற்சாகப்படுத்தி, அவரை வழியனுப்பினர்.