கொரோனா தொற்று பரவாத வகையில் ஜாக்கிங் செய்வது எப்படி என்பதை விளக்கும் அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள பல நாடுகளில் உடற்பயிற்சி செய்வதற்காக பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜாக்கிங் செல்வோருக்கான பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கி அன்சிஸ் என்ற இன்ஜினியரிங் சிமுலேஷன் நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஒருவரின் பின்பக்கம் 2 மீட்டர் இடைவெளிவிட்டு ஓடுவதை காட்டிலும் பக்கவாட்டில் செல்வது பாதுகாப்பானது என்று வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.