இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வேலையிழந்து வீடுதிரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகமுள்ள தெற்காசிய நாடுகளில் குறிப்பாக நகர்ப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகுந்த சவாலானதாக இருக்கும் என உலகவங்கி கூறியுள்ளது.
ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலையிழந்த நிலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததாகவும், அதன் மூலம் பாதிக்கப்படாத பகுதிகளுக்கும் அவர்கள் கொரோனாவை கொண்டு சென்றிருக்கலாம் என்றும் உலகவங்கி குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம் தெற்காசிய நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைவாக இருப்பதே அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை விட இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.