கொரோனா வைரசின் தாக்கம் தெற்காசிய நாடுகளின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை விடக் குறைவான அளவிலேயே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
180 கோடிக்கு மேல் மக்களையும் மிகவும் நெருக்கமான மக்கள் அடர்த்தியுள்ள நகரங்களையும் கொண்டுள்ள இந்தப் பகுதி, அடுத்துப் பெருமளவு தாக்குதலுக்கு இலக்காகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் வறுமைக்கு எதிராகப் போராடிப் பல பத்தாண்டுகளுக்குப் பின் அடைந்துள்ள வளர்ச்சி கொரோனா பாதிப்பால் சீர்குலையும் எனத் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் சுற்றுலா, தொழில், வணிகம் ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அது சுட்டிக்காட்டிள்ளது. இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.