ஆயுத உற்பத்தியையும், ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் மக்களுக்குத் தேவை ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர். கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாட்டிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகச் சில கார்தினல்கள் மட்டுமே இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
பிரார்த்தனையின் முடிவில் பேசிய போப் பிரான்சிஸ், கருக்கலைப்பு மற்றும் அப்பாவி உயிர்களைக் கொல்வது நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் ஆயுத உற்பத்தியையும், ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.