ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள கருத்தடை மருந்துகளின் தட்டுப்பாட்டால், ஜிம்பாப்வே நாட்டில் தேவையற்ற கருத்தரிப்பை தடுக்க முடியாமல் பெண்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு முறை கைவிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய, கருத்தரிப்பை தடுக்கும் மருந்துகள் மற்றும் ஆணுறை போன்றவையும் தடைபட்டுள்ளதால் தேவையற்ற கருத்தரிப்புகள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக மருத்துவ கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் கிராமப்புற பெண்கள், குடும்ப கட்டுப்பாடு எனும் அம்சத்தை எப்போது மீண்டும் கொண்டு வரப்போகின்றீர் என கண்ணீருடன் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.