உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு மின் நிலையம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அணுமின்நிலையம் கடந்த 1986ஆம் ஆண்டு வெடித்து விபத்துக்குள்ளானதில் உலகில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அணுமின்நிலையத்தை சுற்றி 30கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த இடம் மேலும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3ந் தேதி இந்த அணுமின்நிலையத்தின் மேற்கு பகுதியில் பற்றிய தீ அருகில் உள்ள காடுகளுக்கும் பரவியது.
இதனை அடுத்து தீயை அணைக்கும் பணியில் விமானங்களும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.