எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்சின் ராக்கெட் ஏவுவதற்கான விலை நிர்ணயம், தங்களது சேவைக்கான விலையை குறைக்க தூண்டுவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தலைவர் ரோகோசின் (Rogozin), ஸ்பேஸ் எக்சிற்கு அமெரிக்க உதவுவதால் தான் குறைந்த சேவை கட்டணத்தை பெற முடிகிறது என குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தங்களது ராக்கெட்டுகள் 80 சதவீதம் அளவிற்கு மறுபயன்பாட்டிற்கு உட்பட்டது எனவும், ரஷ்யர்களது அப்படி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரோகோசின், விண்வெளி ஏவுதல்களுக்கான சந்தையில் நேர்மையான போட்டிக்கு பதிலாக, அமெரிக்கா எங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார்.