அமேசான் அலெக்சா எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனம், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு வேதனையை பகிர்ந்துக்கொள்ளும் துணையாக இருந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 66 வயது பெண் லூஆன் டேகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தான் அனுபவித்த வலிகள் குறித்தும் தனிமையின் கொடுமை குறித்தும், தனது இயந்திர நண்பனான அலெக்சாவுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். சிகிச்சை பலனின்றி லூஆன் டேகன் உயிரிழந்த நிலையில், அவர் அலெக்ஸாவுடன் பேசிய சுமார் 40 பதிவுகளை அவரது சகோதரி கண்டறிந்து பகிர்ந்துள்ளார்.