அமெரிக்காவின் அலபாமா (Alabama) கடலோர பகுதியில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிப்போன வனப்பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் உடா (utah) பல்கலைகழக விஞ்ஞானிகள் குழு, அலபாமா கடலோர பகுதியில் 60 அடி ஆழத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூழ்கி போன வனப்பகுதியை கண்டுபிடித்தது. கடலுக்கடியில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் மரத்தின் பகுதியை மேலெடுத்து வந்தனர். எதிர்கால மருந்து தயாரிப்பு, பயோ தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு அந்த மரத்தின் பகுதி உதவிகரமாக இருக்குமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.