ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காணொலி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில் கொரோனா நோய்த்தொற்று பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த 31-ஆம் தேதி இதேபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.