இத்தாலியில் கொரோனா தொற்றின் தீவிரத்தை எதிர்த்து கடுமையாக போராடி வரும் அந்நாட்டு மருத்துவர்களுக்கு தோள் கொடுக்கும் விதமாக ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவையும், மருத்துவ உபகரணங்களையும் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா அனுப்பி வைத்தது.
அந்த வகையில், பெர்கமோ நகரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இத்தாலி மருத்துவர்களுடன் இணைந்து ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 32 மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளளனர்.