துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் தெருவோரம் வசிக்கும் பூனைகள், கொரோனா அச்சுறுத்தலால் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
வீட்டின் கூரைகள், குறுகிய சந்துகள், கட்டிடங்களின் நுழைவு வாயில்கள் என்று எங்கு பார்த்தாலும் பூனைகள் கண்ணில் படும் இஸ்தான்புல்லில், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வழிப்போக்கர்கள், சமூக ஆர்வலர்கள் தரும் உணவை நம்பி வாழ்ந்து வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூனைகள், இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சாலையோரம் வசிக்கும் பூனை, நாய், புறா உள்ளிட்டவற்றிக்கு உணவளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.