கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதிரியார்கள் அனைவரும் புனிதர்கள் என்று போப் பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐரோப்பாவின் வாட்டிகன் சிட்டியில் மக்கள் கூட்டமின்றி வெறிசோடி காணப்பட்ட தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு சில பேருடன் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொலைக்காட்சியிலும், இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், இத்தாலியில் கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொண்ட 60க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர் என்றும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்கள் புனிதர்கள் என்றும் பாராட்டினார்.