கொரோனா தடுப்பூசி சோதனைக்கான நபரை தேர்வு செய்துள்ளதாகவும், மே மாத வாக்கில் சோதனை துவக்கப்படும் என்றும் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவித்துள்ளது.
மேரிலாண்டில் இதை தெரிவித்த நோவாவேக்ஸ் தலைமை விஞ்ஞானி டாக்டர் கிரிகோரி கிளென் (REGORY GLENN) விலங்குகளிடம் இது வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கொரோனா வைரசின் மேற்பகுதியில் காணப்படும் முள் போன்ற அமைப்புகள் மனித செல்லுக்குள் ஊடுருவி சூப்பர்குளூ போன்று கெட்டியாக பற்றிப் பிடித்துக் கொள்கிறது என அவர் விவரித்தார்.
இதை தடுக்க அந்த முள் போன்ற பகுதிகளின் பிடிமானத்தை பலவீனப்படுத்தக்கூடிய ஆன்டிபாடீஸ் தாங்கள் பரிசோதிக்க உள்ள தடுப்பூசியில் உள்ளது என்றார் அவர்.
தடுப்பூசி சோதனைகள் முடிய 2 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்த டாக்டர் கிரிகோரி கொரானா வைரஸ் வேறு வடிவெடுத்து இரண்டாம் கட்ட பரவலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது என கூறியுள்ளார்.