செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கூகுள் கிளாஸ்ரூம் - அதிகரிக்கும் பயன்பாடு..!

Apr 10, 2020 01:03:20 PM

உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழி கல்விச் சேவையான "கூகுள் கிளாஸ்ரூம்" பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து, 10 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கூகுள் கிளாஸ்ரூம் என்பது இணையத்தின் மூலம் வழங்கப்படும் இலவச சேவை. இதை பயன்படுத்த ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இருந்தால்போதும்.  ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளவும், வீட்டுப்பாடங்கள் உள்ளிட்ட படிப்பு தொடர்பான அசைன்மென்ட்டுகளை அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது.  அவரவர் இடத்தில் இருந்தபடியே கற்றலையும்-கற்பித்தலையும் மேற்கொள்வதற்கு இந்த கூகுள் கிளாஸ்ரூம் இணைய சேவை பயனுள்ளதாக திகழ்கிறது.

இந்த சேவை ஏற்கெனவே அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இதுவரை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வந்த இத்தாலி, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் கூகுள் கிளாஸ்ரூம் பிரபலமடையத் தொடங்கியுள்ளது என கூகுள் கல்விப் பிரிவுக்கான துணைத் தலைவர் அவ்னி ஷா (Avni Shah) தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்,  இத்தாலியின் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வி முறையே, கூகுள் மென்பொருள்கள்  உதவியுடன் இணைய வழி கல்விக்கு மாறியுள்ளது.

இதேபோல, வேறு பல நாடுகளிலும், கல்விக்கான கூகுள் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கூகுள் கிளாஸ்ரூம் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குப் பிறகு இரண்டு மடங்கு அதிகரித்து 10 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதேபோல, G Suite for Education எனப்படும், கூகுளின் இணைய வழி கற்றல்-கற்பித்தலுக்கான மென்பொருள் கருவிகளின் தொகுப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12 கோடியாக அதிகரித்துள்ளது. மீட் எனப்படும் கூகுளின் வீடியோகான்ஃபரன்சிப் ஆப்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 25 மடங்கு அதிகரித்துள்ளது


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement