சவூதி அரேபிய மன்னர் சல்மான் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்பட 150 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
இதனால் 500 பேருக்கு உயர் தர சிகிச்சையளிக்கக்கூடிய தனி மருத்துவமனை ஒன்று மன்னர் குடும்பத்தினர், உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னர் செங்கடல் பகுதியில் உள்ள அரண்மனையிலும் பட்டத்து இளவரசர் எதிர்காலத்தில் கட்ட திட்டமிட்ட நகரப்பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சவூதியில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3300 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 44 பேர் இக்கொடிய நோய்க்கு உயிரிழந்தனர். கொரோனா காரணமாக முதன்முறையாக ஹஜ் புனித யாத்திரை கேள்விக்குறியாகி உள்ளது. மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.