ஸ்பெயினில் கொரோனாவின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் எம்.பி.க்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதால் காலியாக காணப்பட்ட நாடாளுமன்றத்தில் பேசிய அவர் கொரோனா தொற்று உச்சகட்டத்தை அடைந்து விட்டதால் இனி இது படிப்படியாக குறையும் என்ற அவர் அவசரநிலையை ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரினார்.
1918 ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் புளூவிற்குப் பிறகு மனித குலம் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொரோனா வடிவில் சந்திப்பதாக அவர் கூறினார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 14 ஆயிரத்து 792 பேர் அதற்கு பலியாகி உள்ளனர்.