ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புனரமைக்கப்பட்டு வந்த அரண்மனை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புரோபேன் வாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ, கட்டிடங்களின் மற்றப் பகுதிகளுக்கு பரவியதாகவும், உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
அரண்மனையை அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையமாக மாற்றும் பணி இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிந்து மக்கள் பயன்பட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீவிபத்து நிகழ்ந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.