கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உதவ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக பேசிய அவர், போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறோம் என்றும் அவர் குணம் அடைவதற்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவருக்கு உதவும் பொருட்டு, கொரோனாவுக்கான தீர்வுடன் தங்களிடம் வந்த 2 அமெரிக்க முன்னணி மருந்து நிறுவனங்களிடம் இங்கிலாந்து அரசை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களை தொடர்பு கொண்டு விசாரித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.