சீனாவில் தர்பூசணி பழங்களுக்கு நடுவே வைத்து கடத்தப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான முதலைத் தோல்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
யுன்னான் மாகாணத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அதனுள் ஏராளமான தர்பூசணிப்பழங்கள் இருந்தது தெரியவந்தது. ஆனாலும் சந்தேகம் தீராத போலீசார் லாரியை முழுமையாகச் சோதனை செய்தபோது, அதனுள் ஏராளமான முதலைத் தோல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடைப்பந்து மைதானத்தில் முதலைத் தோல்கள் அடுக்கி வைக்கப்பட்டு எண்ணிக்கையை சரிபார்த்தபோது, அதில் ஆயிரத்து 213 தோல்கள் இருப்பது தெரியவந்தது. கடத்தலில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.