ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் கடந்த 5 ஆண்டுகளில் 3 வது முறையாக நிறம் மாறி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் வெப்பநிலை, கடல் நீரில் காணப்படும் நீரோட்டங்களின் திசை மாறுபாடு மற்றும் மனிதர்கள் உண்டாக்கும் மாசுபாடு காரணமாக பவளப்பாறைகள் நிறம் மாறுவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் டோரஸ் நீரிணையில் இருந்து 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் பவளப்பாறைகள் வெளிறிய நிறத்திற்கு மாறி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிறமாறுபாடு பவளப்பாறைகளை உடனடியாக அழிக்காவிட்டாலும், வெப்பநிலை அதிகரிக்கும் போது பவளப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் நடக்கும் 3 வது பெரிய நிகழ்வு இது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.