பிரிட்டனில், இந்திய வம்சாவழி மருத்துவர் ஒருவர், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள கார்டிப் நகரில் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, ஜிதேந்திரா ரத்தோடு (Jitendra Rathod) என்ற இந்திய வம்சா வழி மருத்துவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.
அண்மையில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தார்.