பிரிட்டனில் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்த இந்திய மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற ஜிதேந்திர குமார் ரத்தோட், இங்கிலாந்துக்குச் சென்று தேசிய சுகாதார சேவை பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
மேலும், வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையின் இணை நிபுணராக பணியாற்றி வந்த ஜிதேந்திர குமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.