மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் ராஸ்காஸ்மாசின் (Roscosmos) துணை நிறுவனமான க்ளாவ்காஸ்மாசுடன் (Glavkosmos) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டது.
4 வீரர்களும் கடந்த வாரம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கலத்தின் செயல்பாட்டு அமைப்பு குறித்த தேர்வில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக நடைமுறையில் உள்ள ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் என்வே அடுத்த கட்டப் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் ஏப்ரலுக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.