அயர்லாந்து பிரதமரும், மருத்துவருமான லியோ வராத்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.
வராத்கர் அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு ஏழு ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார். பின்னர் முழுநேர அரசியலில் இறங்கியதால் கடந்த 2013ம் ஆண்டு மருத்துவத் தொழிலில் இருந்து விலகினார். இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அயர்லாந்தையும் பாதித்தது.
இதனால் அங்கு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தன்னை மருத்துவராக பணியாற்ற அனுமதிக்குமாறு சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அனுமதி கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு லியோ மருத்துவராகப் பணியாற்றுவார் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.