ரஷ்யாவில் , ஊரடங்கு உத்தரவை, மக்கள் தீவிரமாக கடைபிடிப்பதை தொடர்ந்து, அதன் தலைநகர் மாஸ்கோவில், உள்ள முக்கிய வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.
ரஷ்யாவில், முதன் முதலாக கொரோனா தொற்று மாஸ்கோவில் கண்டறியப்பட்டு, அங்கிருந்து நாடு முழுவதும் பரவியது.
இதை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல் படுத்தியதால், மாஸ்கோ மாநகர மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும், வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.