உலகம் முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தாங்கள் தயாரிக்க இருக்கும் வெண்டிலேட்டரின் முன்மாதிரியை, யூடியூபில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம், வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம், வெண்டிலேட்டர் தயாரிக்க விடுத்துள்ள கோரிக்கையை தொடர்ந்து.
வாகன உதிரிபாகங்களால், இந்த வெண்டிலேட்டரை தயாரிக்கப்பட்டுள்ளதாக, டெஸ்லா நிறுவன பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.