அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
கொரோனா பாதிப்பைக் குணப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் வழங்கி இருந்தன. ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை, கொரோனா பரிசோதனைக் கருவி, முகக்கவசம், வென்டிலேட்டர் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மார்ச் 25ஆம் தேதி இந்தியா தடை விதித்தது.
முன்பே ஆர்டர் செய்த மாத்திரைகளை விடுவிக்க உதவுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால், ஆவன செய்வதாக மோடி உறுதியளித்தார். இந்நிலையில் இந்தியாவின் மருந்து உற்பத்தித் திறன், இப்போதும் எதிர்காலத்திலும் உள்நாட்டுக்குத் தேவைப்படும் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.