அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியதால் முதலை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. தெற்கு கரோலினாவில் உள்ள மெர்டில் கடற்கரைப் பகுதியானது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி மயான அமைதியுடன் காணப்படுகிறது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுவதாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் அருகில் இருந்த ஆற்றில் வாழ்ந்த முதலை ஒன்று சாலைப்பக்கம் வந்தது.
பின்னர் யாரும் இல்லாததால் சாவகாசமாக நடந்து சாலையைக் கடந்து சென்றது. பின்னர் குடியிருப்பு பகுதிகளின் வழியாகச் சென்ற அந்த முதலை பின்னர் வேறு இடத்தில் உள்ள நீர்ப்படுகையில் சென்று மறைந்து போனது.