சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், 46 மருத்துவ பணியாளர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதன்முதலாக தாக்கிய சீனாவில், சுமார் 81ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் இறப்பு விபரம் குறித்து அந்நாட்டு அரசு முதன்முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,95 காவல் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் தங்களது உயிரைத் தியாகம் செய்திருப்பதாக சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.