கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்ற அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர நிதி வழங்கப்படும் என்றார்.
கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.