பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ”குருத்தோலை ஞாயிறு” விழாவை முன்னிட்டு, வாகனங்களில் வலம் வந்த கத்தோலிக்க பாதரியார்கள், வீதிகளில் கூடிய மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு, தேவாலயங்களில், கூட்டு வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிந்த பாதரியார்கள், திறந்த வெளி வாகனங்களில், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, மக்களை ஆசீர்வாதித்தனர்.
இவர்கள் செல்லும் வீதிகள் முழுதும், ஏராளமானோர் கூடி, குருத்தோலையை அசைத்து வரவேற்றனர்.