கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக மொபைல் ஆப் மற்றும் இணையவெளி ஒன்றை வடிவமைத்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான டிம் குக்கிற்கு அமெரிக்க செனட் சபையினர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ஆப் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் களவாடப்படலாம் என்றும் அவர்களின் தனிப்பட்ட உடல்நல விவகாரங்கள் களவு போகலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த ஆப்பிள் நிறுவனம் இந்த மென்பொருள் சைன்-இன் கேட்பதில்லை என்றும் அது ஆப்பிள் பயன்படுத்துவோர் ஐடியுடன் எந்த தொடர்பும் கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பெறப்படும் தகவல்கள் தனிநபரை அடையாளப்படுத்தாது என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.