அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் முன்னாள் ராணுவ வீரர், தனது 104வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்.
ஓரிகான் மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் 15 முதியவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களின் ஒருவரான லாப்ஸ்சீஸ், அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை மூலம் மெல்ல மெல்ல கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து முதியோர் இல்லத்துக்கு வெளியே சமூக இடைவெளியை பின்பற்றி, லாப்ஸ்சீஸின் 104வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.