கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாகச் சீன அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் மூவாயிரத்து 326பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 76 ஆயிரத்து 755 பேர் சிகிச்சைக்குப் பின் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும், ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது குறைவான மதிப்பீடு என்றும், உண்மையான எண்ணிக்கையைச் சீனா மறைப்பதாகவும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது. ஊகானில் மட்டும் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகச் சீனச் செய்தி நிறுவனத்தின் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள சிஐஏ, உண்மையை அறியத் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.